அடுத்த ஆண்டு முதல் பாடசாலை கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பாடத்திட்டம், கல்வி கற்பிக்கும் முறை மற்றும் பரீட்சை முறையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், “இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 160 பாடசாலைகள் உள்வாங்கப்படும்.
அறிவை ஆராயும் முறை
21ம் நூற்றாண்டில் உலகத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களை மாற்றுவதே எமது நோக்கம்.
பரீட்சைகளில் மாத்திரம் மாணவர்களின் அறிவை ஆராயும் முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற கல்வி முறையின் ஊடாக, செயல் திறனான ஒருவர் உருவாகமாட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.