கனடாவில் வேலை மற்றும் வதிவிட விசா பெற்றுத் தருவதாக கூறி 5 இலட்சம் ரூபா தொடக்கம் 20 இலட்சம் ரூபா வரை பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றிய நபர் ஒருவர் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (2) ஒப்படைக்கப்பட்டதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய 25 பேரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் அவரைக் கைது செய்ததாகவும், சந்தேகநபருக்கு எதிராக இதுவரை 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தரும் கைது
கனேடிய தொழில் ஆட்கடத்தலுக்கு உதவிய எம்பிலிப்பிட்டிய உள்ளுராட்சி சபையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரையும் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.