தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

வவுனியாவில் தாய், தந்தை இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் வவுனியா குட்செட் வீதி அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம் பெற்றுள்ளது.

பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குடும்பத்தினரின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை உயிரிழந்த இளம்பெண் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என நால்வருள்ள குடும்பமொன்றில் உறுப்பினர்கள் வீட்டிலிருந்து இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்ககையில் பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரு பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உயிரிழப்பு
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை இவர்களின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.