யாழில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 27 வயது இளைஞன்

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவிற்குற்பட்ட உடுப்பிட்டி பகுதியில் மேசன் வேலை செய்து கொண்டு இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காரைநகரை சேர்ந்த சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீடு ஒன்றின் மேற்தளத்தில் சிற்ப வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்ற வேளை அவர் இரும்பு குழாய் ஒன்றை மேலே உயர்த்திய போது குழாய் உயரழுத்த மின்கம்பத்தில் தொடுகையுற்றதால் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலதிக சிகிக்சை
இதில் மின்சாரம் தாக்கி வீசப்பட்டவரை மீட்டு வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிக்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.