சுற்றுலா இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, 2 ஆவது டி20 போட்டி தற்சமயம் நிறைவடைந்துள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட தொடரில், முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது.
டி20 தொடரை கைப்பற்றுவதற்கு இலங்கை அணிக்கு இந்த போட்டி முக்கியம் வாய்ந்ததாகவும், மறுபுறம் குறித்த தொடரை சமன் செய்வதற்கு நியூஸிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டியும் இருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில், களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களின் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு 142 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 14.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 1 – 1 என நியூஸிலாந்து அணி சமன் செய்துள்ளது.