இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் மிகப்பெரிய திறைசேரி உண்டியல்களை இன்றைய தினம் (17-05-2023) வெளியிட்டுள்ளது.
அந்த உண்டியல்களின் பெறுமதி 180 பில்லியன் ரூபாவாகும்.
இதன்படி, மத்திய வங்கி இன்று 180 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலத்தில் விட, 261 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.