முடி அதிகமாக கொட்டுகின்றதா? வழுக்கையை பிரச்சினையா? ஜோதிட ரீதியில் இந்த பிரச்சினை இருக்கிறதாம்

முடி கொட்டும் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு ஜோதிட ரீதியான காரணங்களும், பரிகாரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தலைமுடி பிரச்சினை
இன்று பெரும்பாலான ஆண்கள், பெண்கள் முடி கொட்டும் பிரச்சினையாலும், நரை முடியினாலும், வலுக்கை பிரச்சினையினாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெண்களைப் பொருத்தவரை நீளமான கூந்தலை வைத்திருந்தால் தான் ஆண்களுக்கு அதிகம் பிடிக்கும். இதே போன்றும் இன்று ஆண்களும் தலையில் குடுமி போட்டுக் கொண்டு வலம் வருகின்றனர்.

ஆனால் இவை உடல்சார்ந்த மற்றும் அழகு சார்த்த பிரச்சினையாகவே இதுவரை நாம் பார்த்து வருகின்றோம். ஆனால் முடி பிரச்சினைக்கு பின்னே ஜோதிட ரீதியான காரணங்களும் இருக்கின்றது.

ஜோதிட ரீதியான காரணங்கள்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னமும் சுக்கிரனும் பலமாக இருந்தால், கருமையான முடி வளருமாம். ஆம் சாதாரண முடிக்கு காரகன் கேது என்றாலும், கருமையான கூந்தலுக்கு காரகன் சுக்கிரன் தானாம்.

ஜென்ம லக்னம் இதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. இவை பலமாக இருந்தால் தான் முக அழகு, நல்ல உடலமைப்பு, அழகான தலைமுடி இவற்றினை பெற முடியும்.

ஜாதகத்தில் சூரியன் உச்சம் பெற்றாலும், நீச்சம் பெற்றாலும் அல்லது சூரிய சுக்கிர சேர்க்கை நெருங்கிய பாகையில் ஏற்பட்டால் முடி கொட்டுமாம். இதே போன்று சூரியன் குரு செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டாலும் இந்த பிரச்சினை இருக்கும்.

ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இருந்தாலும் முடி கொட்டுவதோடு வழுக்கையும் ஏற்படும்.

பரிகாரம் என்ன?
அதிக முடியை கொண்டவன் எனும் பொருளுடைய கேசவ பெருமாளை வணங்குவது முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்.

முடி வளர் தைலங்கள் அனைத்தும் ‘கேச’ என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்த பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை அதர்வண வேதத்தில் உள்ளதாம்.

தினமும் காலை குளித்துவிட்டு ஆதித்ய ஹிருதயம் கூறி சூரிய நமஸ்காரம் செய்வதோடு தாமிர பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பச்சை மரத்திற்கு ஊற்ற வேண்டும்.

இதன் மூலம் உடல் சூட்டினால் முடி உதிர்வது தடுக்கப்படுவதுடன், அழகான கூந்தலை பெற வெள்ளிக்கிழமையில் சுக்கிரனையும் வணங்க வேண்டும்.

ரத்தம், இரும்புச்சத்து ஆகியவற்றின் காரகனான செவ்வாய் பகவானை வணங்குவது முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.

கருமையான கூந்தலுக்கு சனீஸ்வர பகவானை வணங்கலாம் சனிக்கிழமைகளில் அவர் காரகம் பெற்ற நல்லெண்ணை தேய்த்து குளிக்கலாம்.

செம்பருத்யாதி தைலம், மருதானி தைலம், பொண்ணாங்கன்னி தைலம், கரிசலாங்கண்ணி தைலம் போன்றவற்றை கூந்தலில் உபயோகிப்பது நல்ல பயனளிக்கும்.