லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி, சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விநியோகம்
இந்த தீர்மானம் தொடர் கோரிக்கையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய முனையத்தில் இருந்து தினமும் 30,000 முதல் 40,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.