பல் வலிக்கு உடனடி தீர்வு – இதை மட்டும் செய்து பாருங்கள்!

ஈறு பிரச்சினை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலகுவாக வரக்கூடிய ஒரு பிரச்சினையாகும்.

பற்களின் வேர்களை பாதுகாப்பது தான் ஈறின் தொழிலாக காணப்பட்டு வருகின்றது. ஈறு வெளிர் நிறத்தில் இருந்தால் எதோ ஒரு வகையில் பிரச்சினை வரபோகின்றது என்று தான் அர்த்தம்.

அதனால் தான் ஈறு வீக்கமடைந்து, வலி ஏற்பட்டும் மற்றும் இரத்தக்கசிவும் ஏற்படும். ஈறு வீங்குவதற்கான காரணங்கள், ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலம், தவறான முறையில் பல் கட்டுதல் மற்றும் தவறான முறையில் பல் விளக்குதல் போன்ற காரணத்தினாலும் இது வீங்கி வருகின்றது.

வீட்டில் இருந்தவாறே தடுக்கலாம்

இதனால் அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயங்களை வீட்டில் இருந்தவாரே தடுக்கலாம். ஒரு சில அடிப்படை மூலிகைகளை வைத்தும் இதை முறையாக செய்யலாம்.

கிராம்பு பொடியை பற்பொடியில் கலந்து, அதை பயன்படுத்தினால் பல் வலி மற்றும் ஈறுவலி குணமாகும்.

கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

உப்பு நீரில் கொப்பளித்தால் பல் வலி தொடர்வது நின்றுவிடும்.

சூடான நீரில் ஒரு பருத்தி துணியை நனைத்து , பிழிந்து முகத்தில் ஈறு வலி இருக்கும் பகுதியில் ஒத்தடம் வைக்கலாம்.

தேயிலை எண்ணெய் சில சொட்டுக்கள் வெதுவெதுப்பான நீரில் கலந்து நாளிற்கு இரண்டு முறை வாயை சுத்தம் செய்யலாம்.

விட்டமின் டீ நிறைந்த உணவுகளை உண்டால் பற்கள், எலும்புகள் உறுதி பெறும், ஈறு பலப்படும்.