ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இதோ சில நுணுக்கங்கள்

வாழ்க்கை என்பது எப்போதுமே ஒரே சீரானவையாக அமைவது கிடையாது. இது கணிக்க முடியாதவையாக குழப்பகரமான விடயங்களையும் உள்ளடக்கியதாக காணப்படும்

நாம் உண்மையில் செய்ய விரும்பும் விடயங்களை அல்லது நாம் செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிந்த விடயங்களைச் செய்ய நமக்கு எப்போதும் நேரம் இருப்பதில்லை. அவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது எமது வாழ்க்கையை நலமானதாக மாற்றும்.

முதுமை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், அதற்காக எமது ஆரோக்கியமும் காலப்போக்கில் மறைந்து போக வேண்டும் என்று அர்த்தமல்ல.

வயது என்பது ஒரு எண் மட்டுமே

எமது உடலையும் மனதையும் கவனித்துக்கொள்வது, வாழ்க்கையில் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகளை தொடர்ந்து அனுபவிக்க உதவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நாம் நமது வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

இச்செயன்முறை எம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் வழிப்படுத்தக் கூடியவையாக உள்ளது.

ஒரு தனி நபருக்கான தனித்துவங்களை கண்டறிவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரக் கூடியவையாக இவ் ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை வழிசமைக்கும் எனலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை நமக்கு எப்படி அமைய வேண்டும் என்பதை நாம் தீர்மானித்து கொள்ளலாம்.

ஆனால் ஒவ்வொரு வாழ்க்கை முறைமையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய சில விடயங்கள் காணப்படவே செய்கின்றன.

நம் மனதையும் உடலையும் நாம் கவனித்துக் கொள்ளும்போது, நாம் சிறந்தவற்றை உணருவதற்கும், வாழ்க்கையின் சாத்தியக்கூறுகளைப் பெறுவதற்கும் உதவுகின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது, கட்டுப்பாடாகத் தோன்றினாலும், நம்முடைய 16 அல்லது 60 வயதிலும் எம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ உதவும்.

உண்மையிலேயே, வயது என்பது ஒரு எண் மட்டுமே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் நன்மைகள் நாம் வயதாகும்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

ஆகவே,ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது,

ஆற்றல் நிலைகளைப் பாதுகாக்கவும், நோய் மற்றும் வலியைத் தவிர்க்கவும், ஒரு நல்ல மனநிலையை பராமரிக்கவும்,வாழ்க்கையை வேடிக்கையாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நுணுக்கங்கள்

இவ்வகையில், நாம் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது குறித்ததான சந்தேகம் எமக்குள் காணப்படலாம். அதற்கான சில நுணுக்கங்கள் இதோ,

எமது உணவு பழக்கவழக்கங்களை ஆரோக்கியமானதாக தேர்வு செய்ய வேண்டும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய தருணங்களை உருவாக்க அல்லது கண்டறிய வேண்டும்.

போதுமான அளவு நித்திரை கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

உறவுநிலைகளில் ஆரோக்கியத்தை பேணல் வேண்டும்.

சமூக ஊடக பாவனைகள், திரை நேரங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

உடல் சார் மருத்துவ பரிசோதனைகளை மேற்க்கொள்ள வேண்டும்.

புகைப்பிடித்தலை தவிர்ப்பதோடு, மிதமான அளவு மது அருந்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

எப்போதுமே நாம் பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறான பழக்கங்களை வழக்கமாக்கும் போது உடல் உளம் இரண்டுமே ஆரோக்கியமானதாக மாற்றம் அடையும் என்பது உண்மையான விடயமாகும்.