தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 10 வயது சிறுவன்!

பொகவந்தலாவ காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதான சிறுவன் ஒருவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளான்.

குறித்த சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே மலசலகூடத்திற்குள் சென்று இவ்வாறு உயிரை மாய்த்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.