உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த 7ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த ஜெனார்த்தனன் கனிஷ்ரிகா (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மூளை சாவடைந்து உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.