நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபர்

ஹொரணை பிரதேசத்தில் நபரொருவர் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு அந் நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது நபரொருவர் குழந்தையொன்றினை மகனிடம் தனிமையில் விட்டுச்சென்றுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கமைய உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலையத் தளபதி எல்.டி.லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்றைய தினம் வீட்டிற்கு சென்று குழந்தையை பொலிஸாரிடம் அழைத்துச்சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை
இதனை தொடர்ந்து குழந்தை ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பத்து வயது குழந்தையை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிரமான போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.