சிறிலங்காவில் தெடருந்து இயந்திரம் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த சேவைகளுக்காக 74 இயந்திரங்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
உதிரிப்பாகங்கள் இறக்குமதி
எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 இயந்திரங்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாகவும், 15 இயந்திரங்களும் 31 இயந்திரத் தொகுதிகளும் திருத்தப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இந்திபொலகேவிடம் வினவிய போது, இயந்திரங்கள் மற்றும் இயந்திரத் தொகுதிகளைப் பழுதுபார்ப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்கள் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.