கற்பிட்டியில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முயன்ற 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்னிமுந்தலம் பகுதியில் நேற்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் கல்பிட்டி கடற்பகுதியை நோக்கிச் சென்ற படகு ஒன்றை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்ட போதே இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த படகில் கவனமாக மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் தங்கம் அடங்கிய நான்கு பொதிகள் கைது செய்யப்பட்டுள்ளன.