நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – முட்டையின் புதிய விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி

இலங்கையில் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாயாகவும், பழுப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு, வர்த்தக அமைச்சு வர்த்தமானியை வெளியிட்டிருந்தது.

வெள்ளை முட்டை ஒரு கிலோகிராம் 880 ரூபாவிற்கும், பழுப்பு நிற முட்டைகள் ஒரு கிலோகிராம் 920 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் சந்தையின் கட்டுப்பாட்டு விலையில் முட்டை விற்பனை முறையாக நடைபெறாததால் முட்டை தட்டுப்பாடும் காணப்பட்டது.

ஒரு முட்டை 35 ரூபா

இந்நிலையில் இன்று முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி சதொச நிறுவனத்தினால் ஒரு முட்டை 35 ரூபாவிற்கும், பல்பொருள் அங்காடிகளில் இருந்து ஒரு முட்டை 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.