நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(07) எல்.எஸ்.ஈ.ஜீ.எப்.எக்ஸ்(LSEG FX) எனும் சமூக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இவர், இலங்கையின் உண்மையான பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணவீக்க வீதம் வீழ்ச்சி

இதுதொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை வீதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்பம் உள்ளது” என்றார்.