தாத்தாவால் மதுவுக்கு அடிமையான 14 வயது மாணவி

14 வயதே ஆன மாணவி ஒருவர் மது அருந்திய நிலையில் பாடசாலைக்கு சென்றவேளை அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கெகிராவ பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாணவியிடம் விசாரணை

பாடசாலைக்கு அருகில் குறித்த மாணவி நின்றவேளை அவரது செயற்பாட்டில் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியவேளை அவர் மது அருந்தி இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதனையடுத்து காவல்துறையினர் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

தாத்தா தான் காரணம்

இந்நிலையில் குறித்த மாணவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாத்தா தான் தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கெகிராவ காவல்துறையினர் மேலதிக நடவடிக்​கையை முன்னெடுத்துள்ளனர்.