தென்னிலங்கையில் தடையின்றிய மின்சாரம் – இன்று ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்

பொல்பிட்டிய – ஹம்பாந்தோட்டை இடையிலான 220 கிலோவாட் திறனுடைய புதிய மின் விநியோகக் கட்டமைப்பின் பரிமாற்றப் பணிகள் இன்று(24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த அறிவித்தலை இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

காணி தொடர்பான பிரச்சினையால் இந்த திட்டம் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் மின்சாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

தடையின்றி மின்சாரம்

150 கிலோமீட்டர் லைன் கொண்ட இந்த கட்டமைப்பின் ஊடாக, தென் மாகாணத்திற்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.