நாளை ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஏ பிரிவில் பங்கேற்கும் அதே வேளையில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை பி பிரிவில் பங்கேற்கின்றன.

இந்த போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை அணி

பாகிஸ்தானின் முல்தான் நகரில் பகலிரவு போட்டியாக நாளை பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

அத்துடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஏனைய ஐந்து அணிகளினதும் வீரர் குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், இலங்கை அணி இதுவரை பெயரிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.