ரயிலின் கூரை மீது ஏறி சென்ற பயணி தவறி விழுந்து உயிரிழப்பு

ஹொரபே பிரதேசத்தில் ரயிலின் கூரை மீது ஏறி சென்ற பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் கூரையில் ஏறி பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரயில்கள் இரத்து
ரயில்கள் இரத்து செய்யப்பட்டமையினால் கிடைத்த ரயிலில் பயணிக்க முயற்சித்தவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தற்போது பல ரயில்கள் ரத்து மற்றும் தாமதம் ஏற்படுவதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.