யாழில் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் 4 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆ.சிவபாதசுந்தரன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட விசேட கலந்துரையாடல் நேற்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த 4 மதுபான விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் வழங்கப்பட்ட அனுமதியுடன் மட்டுமே இந்த மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் இதன்போது எந்தவொரு அடப்படைச் சட்டங்களும் பின்பற்றப்படவில்லை.
இந்த மதுபானசாலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித அனுமதியையும் வழங்கவில்லை.
அதனால் ஆலயங்கள், பாடசாலைகளின் அருகில் இவை திறக்கப்படுவதாக முறையிடப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.