யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: பாட்டிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை விச மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மன்னாரை சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவ மாதான 53 வயதான பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விச ஊசி செலுத்தி சிறுமி கொலை
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதி விடுதியினுள் திருகோணமலையை சேர்ந்த (12) வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலத்தை மீட்பதற்கு பொலிஸார் விடுதிக்கு சென்ற வேளையில் சிறுமியின் பாட்டியும் அங்கிருந்த கட்டிலில் மயக்கமான நிலையில் கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

குறித்த சிறுமியும் அவரின் பாட்டியும் திருகோணமலை கடற்கரை பகுதியை சேர்ந்த (12) வயதான கேமா எனும் சிறுமியும் (53) வயதுடைய நாகபூசனி சிவநாதன் என்பவருமாவார்.

சிறுமியின் சடலத்தை மீட்பதற்கு பொலிஸார் விடுதிக்கு சென்ற வேளையில் சிறுமியின் பாட்டியும் அங்கிருந்த கட்டிலில் மயக்கமான நிலையில் கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

குறித்த சிறுமியும் அவரின் பாட்டியும் திருகோணமலை கடற்கரை பகுதியை சேர்ந்த (12) வயதான கேமா எனும் சிறுமியும் (53) வயதுடைய நாகபூசனி சிவநாதன் என்பவருமாவார்.

இந்த நிலையில் குறித்த இருவரும் தங்கியிருந்த அறையில் நீண்ட நேரமாக வெளியேறாததால் துரு நாற்றம் வீசியதால் விடுதியின் சேவையாளர்கள் அறையின் கதவை தட்டிய போதும், எந்த பதிலும் கிடைக்காததால் பணியாளர்கள் யன்னல் வழியாக பார்த்தபோது சிறுமி மயக்கமான நிலையில் கிடந்ததையடுத்து சிறுமி நஞ்சருந்தி கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இறந்தவரின் பாட்டி எழுதிய கடிதமும் அறையில் கண்டெடுக்கப்பட்டது, அதில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் , அவருக்கு நஞ்சூட்டிவிட்டு தானும் மரணிக்க முயன்றுள்ளதாக சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டி அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,

சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே உயிரிழந்து கிடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.