நோய் அறிகுறிகள் தென்படுமாயின் அவதானத்துடன் செயற்படுங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

வாய், கைகள் மற்றும் கால்களில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் காணப்படுமாயின் வைரஸ் வேகமாக பரவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நோயினால் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் தீபால் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசிகளானது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.