கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் இன்று (21) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி விலை
கலந்துரையாடலின் போது கோழி இறைச்சி விலையை 200 ரூபாவால் குறைப்பதற்கு கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறில்லை என்றால் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் இன்று (21) தீர்மானமொன்று எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,250 ரூபாவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.