மகள் மீரா பற்றி உருக்கமான அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய் ஆண்டனி!

தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளராகவும், நடிகராகவும் விஜய் ஆண்டனியின் முத்த மகள் கடந்த 19ஆம் திகதி வீட்டில் யாரும் இல்லாதபோது கடந்த 19ம் தேதி அதிகாலையில் மீரா தனது வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பில் தேனாம்பேட்டை பொலிஸார் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனஅழுத்தம் காரணமாக மீரா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தனது மகள் பற்றி உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், ‛‛அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள். தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.