அமெரிக்காவின் கொலராடோவில் வசித்து வரும் 77 வயதான Bud என்ற முதியவருக்கு அதிஷ்ட லாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் விழுந்துள்ளது.
ஓய்வு காலத்தில் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் அவர் அண்மையில் ஹோலி க்ராஸ் வைல்டர்நஸ்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
அவரால் நம்ப முடியவில்லை
இதன்படி கடந்த 06 ஆம் திகதி அதிஷ்ட குலுக்கல் நடைபெற்றது. எனினும் அவர் வாங்கிய சீட்டிற்கு தான் அதிஷ்டம் விழுந்தது என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
இவருக்கு அதிஷ்ட லாபமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக விழுந்துள்ளது. பணத்தை பெற்ற அவர் முதல் முதலாக இவருக்கு தர்பூசணி பழமும், மனைவிக்கு ஒரு பூங்கொத்தையும் வாங்கினார்.
என்ன செய்ய போகிறார்
அத்துடன் கணிசமான தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாகவும், மனைவிக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளை செய்ய பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.