தியாக தீபம் திலீபனின் அறவழித் தடத்தின் இறுதி நாள்: யாழ். நினைவிடத்திற்கு விரையும் பவனி

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவுதினத்தை அனுஸ்ரிக்க தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் இவ் ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி இளைஞர்களை நிகழ்வில் இணைத்துக் கொள்ளும் முகமாக இந்த ஊர்தி பவனி முன்னெடுக்கப்படுகிறதாக குறிப்பிப்பட்டுள்ளது.

நல்லூரை சென்றடையும்
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விசுவமடு, தர்மபுரம், பரந்தன், ஆனையிறவு, பளை, சாவகச்சேரி ஊடாக குறித்த ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூரை சென்றடைந்து அங்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.