இலங்கையில் மீண்டுமொரு நிலநடுக்கம்!

இலங்கையின் மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு (25) 11.20 அளவில், ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

மொனராகலை மற்றும் படல்கும்புர ஆகிய பகுதிகளிலும் இந்த நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நில அதிர்வினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.