கொழும்பில், இளைஞன் ஒருவர் தனது காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி காதலி வீட்டின் முன் வாயிலில் ஒட்டியதாக முறைப்பாடொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கெஸ்பேவ பிரதேச புறநகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4 அந்தரங்க புகைப்படங்களை பொலிஸார் கண்டுபிடித்ததோடு அவை பெரிதாக்கப்பட்டு திருத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
அத்தோடு அந்தரங்க புகைப்படங்கள் அடங்கிய மடிக் கணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதுடைய பெண்ணும் சந்தேக நபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாக தெரிய வந்துள்ளது.
பாடசாலை நண்பரான சந்தேகநபருடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் அங்கு புகைப்படங்களும் எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காதலனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறைப்பாட்டாளர் சந்தேக நபரைத் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த சந்தேகநபர் A4 தாளில் அவரது முகத்துடனான படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து பெரிதாக்கி வீட்டு வாயிலில் ஒட்டியுள்ளார்.
அதனைப் பார்த்த காதலி செய்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.






