எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்தநிலையில்,புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான ஏற்பாடுகள்
புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமைகளால் சில மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பிலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்தும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.
எனவே, அனர்த்த முகாமைத்துவ மையத்துடன் இணைந்து, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.