அடக்குமுறை தீவிரமடையும் போது கிளர்ச்சியே ஏற்படும் : செல்வம் எம்.பி கண்டனம்

ஜனநாயக போராளிகள் கட்சியின் துணைத் தலைவர் நகுலேஷ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) ரெலோ கட்சியின் 11 தேசிய மாநாடு பற்றிய கட்சி உறுப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயுத போராட்டம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த சிங்கள தேசத்தின் அடக்கு முறைக்கு எதிராக தான் ஆயுத போராட்டம் தொடங்கியது.

இந்த அடக்குமுறை நெருக்குதல்களை கொடுக்கின்ற போது அடக்குமுறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள்.

இப்போது போர் துப்பாக்கிச் சத்தங்கள் இல்லையே ஒழிய அதேபோலான சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே மண்ணுக்காக உயிர்தியாகம் செய்கின்ற அத்தனை பேருக்கும் நாங்கள் செய்கின்ற கைமாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தான்.

நகுலேஸ் கைது செய்யப்பட்டார். மாவீரர் பெற்றோரை கௌரவித்தது தான், அவர் செய்த தவறு. பயங்கரவாத தடைச் சட்டத்தில் அவரைக் கைது செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கண்டிக்கின்றோம்.” – என்றார்.