வெப்ப அதிர்ச்சியால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் தோல் நோய்கள் பரவி வருவதாகவும், இந்த நிலைமை குழந்தைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பகல் வேளையில் குழந்தைகள் விளையாடும் போது அதற்கு உகந்த இடத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகளை தண்ணீர் மற்றும் திரவங்களை முறையாக குடிக்க அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகள்
குழந்தைகளின் நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, வாந்தி, தூக்கம், பசியின்மை போன்றவற்றால் உடல் அசௌகரியமாக காணப்படுவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகளுக்கு இரண்டு முறையாவது குளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், தோல் நோய் உள்ளவர்கள் காலை மற்றும் இரவில் சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் இருந்தால், ஓரளவுக்கு நிலைமையை கட்டுப்படுத்தலாம்.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்நிலை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்துமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியம் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.