தமிழர் பகுதியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் அரச உத்தியோகஸ்தர் ; நடந்தது என்ன?

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆசிரியர் ஒருவரும் , உயர்தர மாணவியொருவரும் சிக்கிய நிலையில் , இருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் (9) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் அங்கு யாரும் இல்லாத நிலையில், திறக்கப்பட்டு இருவர் உள்ளே சென்றுள்ளனர்.

பொலிஸாருக்கு பறந்த தகவல்
எனின் உம் நீண்ட ரேரமாகியும் இருவரும் அ உள்ளே இருஎது வெளியேறாததை அவதானித்த சிலர் , இது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளர்.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அலுவலகத்தை திறக்குமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை திறந்து வெளியே வந்தவர், . தன்னை அந்த அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என அடையாளப்படுத்தியுள்ளார்.

வேறு நபர்கள் இருக்கின்றார்களா என அவரிடம் பொலிசார் வினவியபோது, தனது நண்பர் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அறையை சோதனையிட்ட பெண் பொலிசார், அங்கு பெண் ஒருவர் இருப்பதை அவதானித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது அந்த அலுவலகத்தை தானே பராமரிப்பதாகவும், மாலை நேரங்களில் ஓய்வு பெறுவதற்காக இங்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு அந்த பெண் தனது நண்பியென்றும், மலசலகூடத்தை பயன்படுத்தவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார். பெண்ணின் அடையாள அட்டையை பரிசோதித்த பொலிசார், அவர் 20 வயதானவர் என்பதால் அவர்கள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதனால், சனிக்கிழமையில் அலுவலகத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் வாக்குமூலம் பெற்ற பின்னர் அனுப்பி வைத்துள்ளனர்.

அதேசமயம் ஆண் உத்தியோகத்தர் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பிரதான பாடம் ஒன்றை கற்பித்து வருவதாகவும், அவருடன் அலுவலகத்தில் தங்கியிருந்த பெண்ணும் அக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்த மாணவி எனவும் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் தனியார் கல்வி நிலையங்களுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிசார் அறிவுறுத்துகின்றனர்

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் விருத்தி மண்டபம் மற்றும் அரச சுற்றுலாவிடுதி ஆகிய பகுதிகள் அமைத்துள்ள வளாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : JVP News