ஆண்கள் அனுமதி இல்லை; பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்! காரணம் என்ன தெரியுமா?

பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமத்தை குறித்துகுறித்து இந்த பதிவில் காணலாம்.

அதிசய கிராமம்
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கென்யா நாட்டின் மலை அடிவாரத்தில், பாலைவனம் தொடங்கும் பகுதியில் “சம்புரு” என்ற பழங்குடி இனம் வசித்து வருகிறது. இங்கு வாழும் ஆண்கள் ஆடு மற்றும் மாடுகளை வரதட்சணையாக கொடுத்து பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்.

ஒரு பொருளை கடையில் வாங்குவது போல பெண்களை வாங்கும் ஆண்களுக்கு அடிமையாக வாழ்க்கையை நடத்த வேண்டும். அங்கு உள்ள பெண்களுக்கு கல்வி கிடையாது, சம்பாதிக்க முடியாது என இப்படி ஒரு இக்கட்டான சூழலில் வாழ்ந்த பெண் தான் ரெபேகா லோலோசோலி.

இந்த கிராமத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு முதல் முறையாக குரல் எழுப்பியவர் இவர்தான். தனது பள்ளி படிப்பை முடித்த ரெபேகாவுக்கு 18 வயதில் திருமணம் ஆகி 5 குழந்தைகள் பிறந்தன.

காரணம் என்ன
30 வருடங்களுக்கு முன் பிரிட்டன் ராணுவ வீரர்களால் பிளாத்காரம் செய்யப்பட 15 பெண்களில் இவரும் ஒருவர். இதனை காரணம் காட்டி அவரது சொந்த கணவரே அவரை விற்க முயன்றார், இதை சகித்து கொள்ள இயலாத ரெபேகா அவர்களுக்கு எதிராக பேச தொடங்கினர்.

இதை பொறுக்க முடியாத ஆண்கள் அவரை அடித்து சித்திரவதை செய்தனர். அங்கேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சில பெண்களை கணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, சிலர் உணவின்றி இறந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களை ரெபேகா கூட்டிக்கொண்டு தனியா ஒரு விடு கட்டி தங்கினார்.பின்னால், பாதிப்படைந்த பெண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு விலகினர், ரெபேகா `உமோஜா’ என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். `உமோஜா’ என்றால் ஒற்றுமை என்று அர்த்தம்.

பெண்கள் மட்டும்
ஒன்று கூடிய உமோஜா பெண்களை அங்கிருந்து துரத்த ஆண்கள் பல முயற்சிகளை செய்தனர். இப்படி ஆண் ஆதிக்கத்தால் துன்புறுத்தப்பட்ட பெண்கள் அதை பொறுக்க முடியாமல் தப்பியோடி குழந்தைகளுடன் ஒரு கிராபத்தில் தஞ்சம் அடைந்தார்கள்.

பொட்டல் நிலத்தில் ஒரு வீடு கட்டி வாழ்ந்து , பாரம்பரிய நகைகள், கைவினைப்பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர்.இதை தொடர்ந்து பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

இதையெல்லாம் தாங்கி கொள்ள முடியாமல் ஆண்கள் மீண்டும் வந்து தகராறு செய்ய தொடிங்கினர். சொந்தமான இடமாக இருந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்த ரெபேகா,

தனக்கென்று ஒரு இடத்தை வாங்க முடிவு செய்தார். உபோஜா பெண்கள் தொழில் செய்து சேமித்த பணத்தை வைத்து சொந்தமாக இடத்தை வாங்கி, சுற்றி வேலிகள் எழுப்பி, குடில்கள் அமைத்து வாழத் தொடங்கினர்.

1990-ம் ஆண்டு ரெபேகா, 15 பெண்களை கொண்டு தொடங்கிய கிராமம் தெப்போது 250 பேர் கொண்ட குடும்பமாக வளர்ந்துள்ளது. ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் கிட்டும் வருமானத்தில் அங்கு ஒரு பள்ளியையும் நிறுவி உள்ளனர். உமோஜா பெண்கள், ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல. பெண்களை மதிக்கும் ஆண்களை அவர்களும் மதிக்கின்றனர்.