முட்டைக் குழம்புக்காக பெண் கொலை; லிவ்-இன் உறவால் பறிபோன உயிர்

இந்தியாவின் ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில், முட்டைக் குழம்பு சமைத்து கொடுக்காததால், இளைஞர் தனது லிவ்-இன் துணையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் லிவ்-இன் துணையை கொலை செய்த ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லிவ்-இன் துணை கொலை
குர்கானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் 32 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் பொலிசுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில் அங்குவந்த பொலிசார் முகத்தில் காயங்களுடன் இருந்த சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டனர்.அதில், இறந்த பெண் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலி என தெரிய வந்துள்ளது. விசாரணையில் லல்லன் யாதவ் (35) என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பாம்பு கடித்து இறந்ததும் டெல்லி வந்துள்ளார். அங்கு ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு இவர் அஞ்சலியை சந்தித்துள்ளார்.
இருவரும் பழகிய நிலையில், ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். கூலி வேலை செய்து வந்த இருவரும் குர்காலனுக்கு வந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் வீடு இல்லாமல் அங்கேயே வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் திகதிகளின் குடிபோதையில் இருந்த யாதவ், அஞ்சலியிடம் முட்டைக் குழம்பு சமைக்க சொல்லியுள்ளார்.