மதபோதனையில் கொல்லப்பட்ட குழந்தை… வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்

முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உட்பட மூன்று பேரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 15-03-2024 திகதி இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துவிட்டு தாய் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இவ் விடயம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணுடன் மூவரை கைது செய்துள்ளனர்

இந்த கொலை சம்பவத்தின் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாரம்தோறும் முல்லைத்தீவுக்கு வந்து மதபோதனை செய்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குழந்தையை கொலை செய்த பெண்ணும் சந்தேகநபரான மதபோதகரும் தவறான உறவில் ஈடுபட்டதன் காரணமாகவே குழந்தை பிறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.