விசேட அதிரடிப்படை வீரரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்

கணேமுல்லையில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது இடம்பெற்ற, துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீட்டில் நேற்று இரவு சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இதனை தொடர்ந்து பொலிஸ் அதிரடி படையின் பதில் தாக்குதலில் குறித்த நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் பாதாள உலக கும்பல் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.