ஜன்னலை திறந்து வைத்து இளம் தம்பதி செய்த காரியம் – பக்கத்து வீட்டு பெண் எடுத்த முடிவு!

ஜன்னலை திறந்து வைத்து தனிமையில் இருந்த தம்பதி மீது பக்கத்து வீட்டு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆபாச உரையாடல்
பெங்களூரு கிரிநகர் பகுதியில் 44 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டையொட்டி இளம் தம்பதி வசித்து வருகிறார்கள். இந்த தம்பதியின் படுக்கையறை ஜன்னல், அந்த பெண் வீட்டின் முன்பக்க கதவின் முன்பாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில் அந்த தம்பதி ஜன்னல் கதவை திறந்து இரவிலும், பகலிலும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும், காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு ஆபாச உரையாடலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது நாளுக்கு நாள் அதிகரித்து வரவே, அந்த தம்பதியிடம் “ஜன்னல் கதவை அடைத்து விட்டு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என்று பெண் கூறியுள்ளார். இதனை கண்டு கொள்ளாமல் மீண்டும் அந்த தம்பதியினர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அந்த பெண்ணுக்கு தம்பதி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கிரிநகர் காவல் நிலையத்தில், தம்பதி மீது புகார் அளித்துள்ளார். இந்த விசித்திரமான புகாரை கேட்ட போலீசார் ஒரு நிமிடம் ஆடிப் போய், பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.