கம்பஹா வீதி விபத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் 12 வயது சிறுவன் பலி

கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் வீதியில் சைக்கிளில் சென்ற 12 வயது சிறுவன் மீது பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
வீட்டிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற சிறுவனே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டி சாரதியைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.