இலங்கையில் பல பகுதிகளில் பரவிவரும் தோல்நோய்

தற்போது இலங்கையில் பல பகுதிகளில் Leishmaniasis( லெய்ஸ்மனியாசிஸ்) எனும் தோல்நோய் பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நோய் உருவாக்கும் கிருமி- Leishmania donovani நோய் பரப்பும் பூச்சி- sand fly இது நோய் sand fly என்னும் சிறிய ஈக்கள் மனிதர்களை கடிப்பதால் ஏற்படும். என கூறப்பட்டுகின்றது. sand fly உலர்வலய காடுகளை அண்டிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும்.
Leishmaniasis இரு வகைப்படும்.
1. தோல் மட்டும் பாதிக்கப்படும் வகை (cutaneous leishmaniasis)

2. தோல், சீதமென்சவ்வு பாதிக்க படும் வகை. (mucocutaneous leishmaniasis)

இலங்கையில் தோல் மட்டும் பாதிக்கப்படும் வகை நோய் மட்டுமே இதுவரையில் கண்டறியப்பட்டுள்ளது. sand fly கடித்தஉடனேயோ அல்லது சில மாதங்களின் பின்னரோ நோயறிகுறிகள் தோன்றும். முதலில் உடைகளினால் பொதுவாக மூடப்படாத உடறபகுதிகளில் சிறிய சிவப்பு நிற பரு உருவாகும்.

அது காலம் செல்லசெல்ல புண்ணாக பெரிதாகும். இவை அரிப்பு , நோவு போன்ற அறிகுறிகள் அற்ற தோல் திட்டுக்கள். ஆகவே நோயாளிகள் அவற்றை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.

வைத்திய ஆலோசனை பெறுவதில்லை. அனுபவம் உள்ள வைத்தியரால் பரு/ புண்ணை பார்த்தவுடன் நோயை அனுமானிக்க முடியும். நோயை சரியாக அறிய சில பரிசோதனை செய்யலாம். (biopsy/ skin slit smear ).

சில இரத்த பரிசோதனைகளும் இலங்கையில் கிடைக்கப்பெறுகிறது.

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு
யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு
இந்நோய்க்கான சிகிச்சை முறைகள்
1. இது தானாக குணமாகக்கூடியது. ஆனால் அது பெரிய தழும்பை உருவாக்கும். நீண்ட காலம் செல்லும்.

2. stibogluconate மருந்தை புண்ணுக்கு செலுத்துதல்

3. nitrogen ( நைட்ரஜன்) ஆவி பிடித்தல்

4. heat therapy இந்நோயில் இருந்து தவிர்ந்து கொள்ள கூடிய முறைகள்

1. sand fly இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழித்தல்

2. வீட்டை சுற்றி சுத்தமாக வைத்தல்

3. ஈ கடிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளல்

4. ஈ கடி தவிர் மருந்து (repellents) , நுளம்பு வலை பாவித்தல்

5. இந்த ஈ அதிகமாக கடிப்பது மாலை மட்டும் இரவு வேளை. இந்நேரங்களில் வெளியில் வருவதை/ காட்டு பகுதிகளில் நடமாடுவதை தவிர்த்து கொள்ளல்.

6. கை, கால் நீள சட்டைகள் அணிதல்.

இது போன்ற தோல்நோய்/ஆராத புண் உள்ளவர்கள்.