தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்ணை முத்தமிட்ட BJP எம்.பி! சர்ச்சை சம்பவம்

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான 64 வயதான காகன் முர்மு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி, பெண்கள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும், முத்தமிட்ட பெண் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இது தாங்க முடியாத முத்தம் என கூறியுள்ளார்.

தன் தந்தையின் வயதில் இருக்கும் ஒருவர் தன் பாசத்தை வெளிப்படுத்தி கன்னத்தில் முத்தமிடுவது எப்படி பிரச்சினை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினர் தந்தையொருவர் தனது மகளிடம் காட்டும் பாசத்தின் வடிவில் இந்த செயலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.