வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்போது வெப்பநிலை 39°C – 45°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை இந்த வெப்பச் சுட்டெண் காரணமாக, வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.