மீண்டும் வரும் கேப்டன்.. GOAT படத்தில் விஜய் செய்யப்போகும் விஷயம்

விஜய் நடிக்க வந்த புதிதில் அவரது வளர்ச்சிக்கு உதவியவர் கேப்டன் விஜயகாந்த். இயக்குனர் எஸ்ஏசி-காக விஜயகாந்த் இதை செய்தார்.

நடிகர் விஜயகாந்த் கடந்த வருட இறுதியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் அவரது உடலை பார்த்து விஜய் கலங்கி நின்றது எல்லோரையயும் உருக வைத்தது.
இந்நிலையில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தற்போது உருவாகி வரும் GOAT படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்தை மீண்டும் நடிக்க வைக்க இருக்கிறார்களாம்.

இது பற்றி வெங்கட் பிரபு தற்போது பிரேமலதா விஜயகாந்த்திடம் அனுமதி கேட்டிருக்கிறாராம். தேர்தல் பணிகளில் பிசியாக இருப்பதால் தேர்தலுக்கு பின் இதுபற்றி நல்ல முடிவை சொல்வதாக பிரேமலதா கூறிவிட்டாராம்.

விஜயகாந்த் இருந்திருந்தால் விஜய்க்கு நோ என பதில் சொல்ல மாட்டார், அதனால் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்தை மீண்டும் கொண்டு வர நிச்சயம் அனுமதி தருவார் பிரேமலதா விஜயகாந்த் என எதிர்பார்க்கலாம்.