பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போலியான இணையத்தளங்கள் மற்றும் தொழிநுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி போலி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தபால் திணைக்களத்தின் பெயர் மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தபால் திணைக்களம் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. தனது திணைக்களத்தினால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம் வங்கி அட்டை மற்றும் கடன் அட்டை தகவல்களை ஒருபோதும் கேட்பதில்லை என தபால் திணைக்களம் குறிப்பிட்டு்ளது.