மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் கில்லி படத்தில் விஜய்க்கு பிடித்த பாடல் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான புதிய படங்களை தாண்டி விஜய்யின் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த கில்லி பட ரீ-ரிலீஸ் தான் வெற்றிகரமாக இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
ரூ. 8 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 50 கோடி வரை வசூல் சாதனை செய்தது, அதாவது தமிழில் முதலில் 50 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது.

தரணி மற்றும் கில்லி படத்தில் நடித்த பிரபலங்கள் பலர் ரீ-ரிலீஸை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில் கில்லி படம் குறித்து விஜய் கூறிய ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

கில்லி படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று கேட்க அதற்கு விஜய், கில்லியில் எல்லாமே மாஸான பாடல்கள் தான், அதில் எனக்கு மிகவும் பிடித்தது அர்ஜுனரு வில்லு பாடல் தான்.
அந்த காட்சியில் என்னை சுற்றி நிற்கும் அத்தனை பேரையும் ஒரே ஆளாக அடித்து போட்டுவிட்டு திரிஷாவை காப்பாற்றி ஒரு ஜிப்சியில் சேகமாக செல்வேன்.

அந்த மாஸ் சீனுக்கு ஏற்றார் போல் அந்த பாட்டும் ஒரு எனர்ஜியாக இருக்கும்.எப்போது காரில் ஏறினாலும் அந்த பாடலை போட்டுவிடுவேன், அந்த பாடலை போட்டாதான் காரை அப்படியே ஒரு கிரிப்பா ஓட்டிட்டு போவேன் என பதில் கூறியுள்ளார்.