ஜெயம் ரவிக்கு பதிலா இவரா? தக் லைஃப் படத்தில் இணைந்த நடிகர்..

நாயகன் படத்திற்கு பின்பு மணிரத்னம், தக் லைப் படத்தின் மூலமாக உலக நாயகன் உடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார்.

கேங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவாகும் படத்தில் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. அதன் பின் வெளிநாடுகளில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

தக் லைஃப் படத்தில் முன்னதாக ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து இருந்த நிலையில் இருவரும் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகி உள்ளனர்.

துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு படத்தில் களமிறங்கியுள்ள சூழலில், ஜெயம் ரவிக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற கேள்வி இருந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக, இப்போது சென்சேஷனல் நடிகராக இருக்கும் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.