டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்!

2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் திகதி முதல் 29-ம் திகதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.

இந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், உட்பட பல நாடுகள் தங்களின் அணி வீரர்களை அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் T20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வரிந்து ஹசரங்க தலைமையிலான இவ்வணியில் அணியின் மேலதிக வீரராக யாழ்ப்பாணம் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி: வனிந்து ஹசரங்க (கே), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பதும் நிஷங்கா, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துனித் வெல்லலாகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷா பதிரானா, மற்றும் தில்ஷன் மதுஷங்க.

ரிஸர்வ் வீரர்கள்: அஷித ஃபெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியானகே.