இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி ; நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை முகாமை செய்வதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை சீரான மட்டத்தில் பேணுவதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.