கொத்து ரொட்டி – உணவுப் பொதிகளின் விலை குறைப்பு

இன்று (05) இரவு முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.

உணவக உரிமையாளர்களின் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.